Thursday, September 9, 2010

சாயத்தொழிலுக்கு "கை' கொடுக்குமா, ஜெர்மன் தொழில்நுட்பம்!

சுத்திகரிப்பு செலவு கழுத்தை நெருக்குவதால், திருப்பூர் சுற்றுப்பகுதியில் சாயத்தொழில் திண்டாட் டத்தில் உள்ளது. இந்நிலை யில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் வழிகாட்டு தல்படி, ஜெர்மன் தொழில் நுட்பத்தில், இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் 690 சாய ஆலைகள் இயங்கு கின்றன; தினமும் ஐந்து கோடி லிட்டர் தண்ணீர், 500 முதல் 600 டன் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, தினமும் 500 டன் எடை கொண்ட துணிகளுக்கு சாயமேற்றப் படுகிறது. சாய ஆலை களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீர், குழாய் மூலமாக பொது சுத்தி கரிப்பு நிலையத்துக்கு எடுத்து வரப்படுகிறது.







அங்கு முதல்கட்ட சுத்திகரிப்பு மூலமாக, சாயக்கழிவு நீரில் உள்ள கலர் நீக்கப் பட்டு, சுத்தமான உப்பு நிறைந்த தண்ணீராக மாற்றப்படுகிறது. அதன்பின், ஆர்.ஓ., (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) மூல மாக, மூன்று கட்டமாக சுத்திகரிப்பு செய்யப்படு கிறது. எதிர் சவ்வூடு பரவு சுத்திகரிப்பு நடப்பதால், கழிவு நீரில் 85 சதவீத தண்ணீர், சுத்தமான தண் ணீராக பிரித்தெடுக்கப் படுகிறது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அம லாகும் வரை, ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் தண்ணீர் நீர் நிலைகளில் வெளியேற்றப் பட்டது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் நடை முறைப்படுத்தப்பட்ட பின், ஆர்.ஓ.,வில் இருந்து வெளியேற்றப்படும் 15 சதவீத கழிவு நீர், "எவாப் ரேட்டர்'முறையில் ஆவியாக்கப்படுகிறது. "எவாப்ரேட்டர்' தொழில்நுட்பத்தில் ஆவியாக்க முடியாத, 20 ஆயிரம் டி.டி.எஸ்., திறனுள்ள 10 சதவீத "ஜெல்' போன்ற உப்புக்கலவை, "கிரிஸ்டிலைசர்' மூலமாக மீண்டும் உப்பாக மாற்றப் படுகிறது. "எவாப்ரேட்டர்' கட்டு மான செலவும் அதிகம்; இயக்க செலவும் மிக அதிகம். இதனால், சாயத் தொழிலே சுருங்கியுள்ளது. "எவாப்ரேட்டர்' மூலமாக கழிவுநீரை ஆவியாக்க, "ஸ்டீம்' பயன்படுத்தப் படுகிறது. அதற்காக 3,000 டன் விறகு தேவைப் படுகிறது. ஒரு லிட்டர் உப்பு நீரை ஆவியாக்கி, உப்பை பிரித் தெடுக்க மூன்று ரூபாய் வரை செலவாகிறது. அதிக வெப்பம் ஏற்படுவதால், கொதிகலன் பகுதிகள் உதிர்ந்தும், வலுவிழந்தும் போகின்றன. இதை சரிசெய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டியதும் கட்டாயமாகிறது.









தற்போதைய நடை முறையில், ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 80 முதல் 90 ரூபாய் வரை செலவாகிறது. 1,000 லிட்டருக்கு ஆர்.ஓ., செய்ய 30 முதல் 40 ரூபாய் வரை செலவாகிறது. ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் டி.டி.எஸ்., அதிகமான ஜெல் கலவையை சுத்தி கரிப்பு செய்ய, 1,000 லிட்டருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை செலவா கிறது. உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல், ஒட்டுமொத்த சாயத் தொழிலும் படிப்படியாக சரிந்து வருகிறது. இத னால், ஏற்றுமதி ஆர் டருக்கு சாயமேற்றுவதில் சிக்கல் உருவாகுமென அஞ்சப்படுகிறது. இக்கட்டான இத்தகைய காலகட்டத்தில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் ஆலோசனைப்படி, காற்றின் துணையுடன், உப்புநீரை உலர வைத்து, உப்பை பிரித்தெடுக்கும் யுக்தி ஜெர்மன் தொழில் நுட்பத்தில் கையாளப் படுகிறது. மாநில திட்டக்குழு முழுநேர உறுப்பினர் குமாரவேலு கூறியதாவது: ஆர்.ஓ.,வில் கழிக்கப் படும் சாயக்கழிவு நீரை, 10 முதல் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகள் வழியாக கீழே விழச்செய்ய வேண் டும்.







அதற்காக, பருத்திச் செடி, கிழுவை மரங்களை பயன்படுத்தலாம். மேலிருந்து கீழாக வேக மாக விழும்போது, காற்று உள்புகுந்து, உப்புநீரில் உள்ள தண்ணீரை பிரித் தெடுத்து, ஈரக்காற்றாக மாற்றி காற்றில் கலந்து விடும். இதன்மூலமாக, 20 ஆயிரம் டி.டி.எஸ்., ஆக உள்ள உப்பின் அளவு 40 ஆயிரமாக உயர்கிறது. இதேபோல், மீண்டும் மீண்டும் செய்து, மூன்று லட்சம் டி.டி.எஸ்., வரை உயர்த்தலாம். அந்நிலையில், குளிரூட் டும்போது, கரைசலானது உப்பாக மாறுகிறது. இவ் வாறு பெறப்படும் பொட் டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோ ரைடு உப்பை உரமாக பயன் படுத்தலாம். திரவ நிலை யில் உள்ள உப்பு கரை சலையும், தாவரங்களுக்கு தேவையான அளவு தெளிக் கவும், பாய்ச்சவும் செய்யலாம். திருப்பூர், அவரப்பாளை யம் பகுதியில் உள்ள சாய ஆலை ஒன்றில், கடந்த 2003 முதல் 2007 வரை, இத்தகைய இயற்கை முறை சுத்திகரிப்பு நடைமுறை யில் இருந்தது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' கட்டாயமாக்கப் பட்ட பின், அம்முறை கைவிடப்பட்டது. இத்திட் டத்தை செயல்படுத்தினால், சாயத்தொழிலில் உற்பத்தி செலவை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் பாது காக்கப்படுவதோடு, விவ சாயிகளுக்கு உரமும் கிடைக்கும். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆவியாதல், காற்றில் உலர்தல் மூலம் கிடைக்கப் படும் பொட்டாசியம் உர மாக பயன்படும். சல் பரும், விவசாய நிலத்துக்கு சத்துள்ள பொருளாக கிடைக்கும். திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உப்பு பயன்படுத்தப் பட்டு கழிவாக வெளி யேறியது. பல ஆண்டு களாக நிலத்தடியிலும், நீரி லும் கலந்து விளை நிலங் களை பாழ்படுத்தியுள்ளது உண்மை. சுற்றுச்சூழல், விவசாயம், தொழில் ஆகிய மூன்று நலன்களை யும் கருதி, தமிழக அரசு மாதம் 600 டன் அளவுக்கு பொட்டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோரைடு உப்பை மானிய விலையில் வழங்கி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இவ்வாறு, குமாரவேலு தெரிவித்தார். ஆய்வு செய்ய திட்டம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணனிடம் கேட்டபோது,""இயற்கை வழி சுத்திகரிப்பு குறித்து, திருப்பூர் மற்றும் ஈரோடு கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.







மாசுக்கட்டுப்பாடு வாரியமும் ஆய்வு மேற் கொள்ளும். அதிக அளவு தண்ணீரை பயன் படுத்தும் பொது சுத்திகரிப்பு நிலை யங்களுக்கு அம்முறை உகந்ததா, உப்பு பிரித் தெடுப்பது சாத்தியமாகுமா என்பது உள்ளிட்ட பல் வேறு சந்தேகங்களுக்கு நேரில் ஆய்வு செய்து விளக்கம் பெறப்படும்,'' என்றார். கடலில் கலக்குமா? சாய ஆலை உரிமையாளர்கள் மேலும் கூறுகையில், "சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் கலப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படும். அத்திட்டத்துக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதம் 30 கோடி ரூபாய் வரை பராமரிப்பு செலவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "கழிவு நீர் பல இடங்களை கடந்து கடலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், எதிர்ப்பு பலமாக இருக்கும். அத்திட்டத்துக்கு மாறாக, இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னதாகவே, அதற்கான ஆய்வுகளை துவக்க வேண்டும்,' என்றார். முடிவு, தமிழக அரசு கையில்! சாய ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: சாய ஆலைகளில், கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்ற சோடியம் குளோரைடு உப்பு பயன்படுத்தப் பட்டது. ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு ஏதுவாக, தற்போது 12 ரூபாய்க்கு விற்கும் சோடியம் சல்பேட் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதால், சுத்திகரிப்பு செய்து மீண்டும் உப்பாக பிரித்தெடுக்க முடிகிறது; மீண்டும் சாயமேற்றவும் உபயோகமாகிறது. சமீபத்தில் சிலர் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், சாயத்தொழிலில் பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட் உப்பை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பிரித்தெடுக்கப்படும் உப்பை, அப்படியே விவசாயிகள் உரமாக பயன்படுத்த முடியும். உப்பு நிறுவனங்களின் ஆலோசனைப்படி மீண்டும் சாயமேற்றவும் பயன்படுத்தலாம் அல்லது உப்பை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கலாம். தற்போது, இந்தியாவில், பொட்டாசியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சல்பேட் கிடைப்பதில்லை. ஒவ்வொரு தேவைக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது. இயற்கை வழி திட்டமாக இருந்தாலும், உப்பு கொள்முதலில் சற்று செலவு அதிகமாகிறது. இருப்பினும், சுத்திகரிப்பில் செலவு குறைகிறது. தமிழக அரசு, இம்முறையை பரிசீலனை செய்து தமிழகம் முழுவதும் உள்ள சாய ஆலைகளில் அமலாக்க வேண்டும், என்றனர்.



எப்போதும் இல்லாத வகையில்...தங்கம் விர்ர்ர்

தங்கம், வெள்ளி விலை எப்போதும் இல்லாத வகையில்,புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை, ஒரு கிராம் 1,791ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை, தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்துள்ளது.தங்கமாக சந்தையில் வாங்குவதைவிட, பொருள் வணிகச் சந்தையில், அன்றைய நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.பண்டிகை சீசன் துவங்குவதையொட்டி, தங்கம் மற்றும் ஆபரண தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.ரக்ஷா பந்தன் பண்டிகைதுவங்கி, கல்யாண சீசன்,தீபாவளி வரை தங்கத்திற்குஅதிக தேவை இருப்பதால்,தொடர்ந்து விலை ஏறிக்கொண்டு வருகிறது.இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம்மற்றும் வெள்ளி விலை அதிகரித்தது.பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும் போதெல்லாம், அதற்குமாற்று ஏற்பாடாக தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சர்வதேச நாடுகளில் பொருளாதார சீர்குலைவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மற்ற முதலீட்டு வாய்ப்புகளை விட, தங்கத்தின் பக்கம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறிப்பாக ஐரோப்பாவில், தற்போது நிலவும் பொருளாதார சீர்குலைவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைய வாய்ப்பு இருப்பதாகவும், யூரோவின் மதிப்பும் குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கம் வாங்க துவங்கியுள்ளனர்.கடந்த ஜூன் 21ம் தேதி லண்டனில்ஒரு அவுன்ஸ் தங்கம், 1,265 டாலராக இருந்தது. இது, அதிகபட்ச விலையாகும்.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எப்படியிருக்கிறதோ அதை வைத்தே நம் நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.அந்த வகையில், நேற்று காலை மும்பையில் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை,இதுவரை இல்லாத வகையில்,புதிய உச்சத்தை தொட்டது.நியூயார்க்கில், வினியோகஸ்தர்கள் பெருமளவில் தங்கத்தை வாங்கினர்; இதனால், விலைஉயர்ந்தது. இதன் காரணமாக மும்பையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை, 100 ரூபாய் அதிகரித்தது.அதே போல், வெள்ளியின் விலை, 315 ரூபாய் அதிகரித்து,இந்த ஆண்டிலேயே மிகப்பெரிய உச்சமாக ஒரு கிலோ, 32 ஆயிரத்து135 ரூபாயை தொட்டது.சென்னையில் நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும், கிராம்ஒன்றிற்கு, 12 ரூபாய் அதிகரித்து,ஒரு கிராம் தங்கம் 1,791 ரூபாயாக இருந்தது. சவரன், 14 ஆயிரத்து 328 ரூபாயாக இருந்தது. வெள்ளி ஒருகிலோ, 32 ஆயிரம் ரூபாயாக இருந்தது.



இனி மாதாமாதம் இந்திய முதலீட்டு விவரம் வெளியிடப்படும்

இந்திய நிறுவனங்களிலும், இந்தியாவில் தொடங்கப்படும் தொழில்களிலும் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு விவரங்கள் மாதா மாதம் வெளியிடப்படுவதைப் போல், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் செய்யும் நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை மாதா மாதம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மட்டுமே இது தொடர்பான விவரங்களை வைத்துள்ளது. எனவே அதனிடம் இருந்து பெற்று அந்த விவரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அந்நிய நேரடி முதலீடுகளைக் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு இந்திய மைய வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. இத்துறையே ஒவ்வொரு மாதமும் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





வர்த்தகம் சரிவில் தொடங்கி ஏற்றத்தில் முடிவு



Wednesday, 08 September 2010 13:42 யுவா

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று சரிவுடன் துவங்கிய வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. காலை 09.05 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 71 புள்ளிகள் குறைந்து 18574.40 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 22 புள்ளிகள் குறைந்து 5583.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் துவங்கியது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 92 புள்ளிகள் உயர்ந்து 18666.71 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25 புள்ளிகள் உயர்ந்து 5607.85 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிவடைந்தது.

இனி கிரெடிட் கார்டும் அடையாள சான்றாகும்

ரயிலில் 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு பயணம் செய்யும் பயணிகள் அடையாளச் சான்றாக இனி வங்கி 'கிரெடிட் கார்ட்டை'யும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே இணையதளம் மூலம் 'இடிக்கெட்' முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், அடையாளச் சான்றாக, 'வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகளின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்களின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகளை ரயில் பயணத்தின் போது அடையாளச் சான்றாகக் காட்டலாம். இனி 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், போட்டோ ஒட்டிய லேமினேஷன் செய்யப்பட்ட வங்கி 'கிரெடிட் கார்டை'யும் அடையாளச் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



'இன்டெக் 2010' கண்காட்சி இன்று நிறைவு

நான்கு நாட்களாக கோவையில் நடந்த 'இன்டெக் 2010' கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது; 410 கோடி ரூபாய் வர்த்தக விசாரணை நடந்துள்ளது.



கோவை கொடிசியா அரங்கில், கொடிசியா சார்பில் 12வது இன்டெக் தொழிற் கண்காட்சி,கடந்த 1ம் தேதி முதல் நடந்தது; நேற்று கண்காட்சி நிறைவு பெற்றது. இன்ஜினியரிங், வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், லேத், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்களுக்கு உதவும் நவீன ரக கருவிகள், துணைப் பொருட்கள், மென்பொருட்கள், இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் உள்நாட்டு மிஷின் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அரங்குகள் அமைத்து, தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இக்கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.





கொடிசியா சங்கத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: இந்த ஆண்டு 9,000 சதுர அடிப் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் கண்காட்சி அமைக்கப்பட்டது. 471 அரங்குகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் பெரும்பாலான மிஷின்கள் அரங்கிலேயே விற்பனையாகி விட்டன; கூடுதல் மிஷின்களுக்கு 'ஆர்டர்' கிடைத்துள்ளது. மிஷின் டூல்ஸ் தயாரிப்புக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. முன்பு நவீன தொழில்நுட்பங்களை அறிய பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கு கோவை தொழில் துறையினர் செல்ல வேண்டியதிருந்தது. தற்போது கோவையிலேயே அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் காட்சிக்கு வைக்கப்படுவதால், தொழில் துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தொழில் துறையினரின் ஆதரவால், இந்த ஆண்டு இன்டெக் கண்காட்சிக்கு பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது. இரண்டு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 410 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணைகள் நடந்தன. இவ்வாறு கந்தசாமி கூறினார்.



வெல்லம் விலை கிடுகிடு உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை பணி முடிந்ததாலும், சென்ற வாரத்தில் பெய்த மழை காரணமாகவும் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்து விட்டது. வரும் 11ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் தேவை அதிகரித்துள்ளது.கவுந்தப்பாடி, சித்தோடு பகுதியில் உள்ள வெல்லம் சந்தைக்கு வடமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிகின்றனர். வெல்லம் விலை உயர்ந்துள்ளது. சதுர்த்திக்கு பின், ஆயுத பூஜை பண்டிகையின் போது, வெல்லத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். தற்போது வெல்லத்தின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்துள்ளது.



கவுந்தப்பாடி, சித்தோடு மார்க்கெட்டில் இரு வாரங்களுக்கு முன் நாட்டு சர்க்கரை திடம் 60 கிலோ 1,560 ரூபாய், மீடியம் 1,400, மட்டம் 1,300, உருண்டை வெல்லம் 30 கிலோ 750 முதல் 800 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 910 ரூபாயாக விற்பனையானது. வெல்லம் தேவை அதிகரித்ததால் தற்போது உருண்டை வெல்லம் 30 கிலோ மூட்டை 740 முதல் 850 ரூபாய், நாட்டு சர்க்கரை பவுடர் 1,080 ரூபாய், திடம் 1,620 ரூபாய், மட்டம் 1,350 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெல்லம் வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை சீஸன் முடிந்து விட்டதால் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. மழை பெய்த காரணத்தால் வெல்லம் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை பண்டிகை நெருங்குவதால் வெல்லம் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் சித்தோடு, கவுந்தப்பாடி சந்தைக்கு வரத் துவங்கியுள்ளனர். வெல்லம் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளதால், உற்பத்தியும் சூடுபிடித்துள்ளது. ஆயுத பூஜை வரை வெல்லம் விலை குறையாது. வெல்லம் தேவை அதிகரித்துக்கும் பட்சத்தில் வெல்லம் விலை கிலோவுக்கு மேலும் ஒரு ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாடிக்கையாளர் சேவையில் ரிலையன்ஸ் தொடர்ந்து முதலிடம்

வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தரும் வகையில் விலை நிர்ணயம் செய்வதில் அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் லைப் நிறுவனம் தொடர்ந்து 3வது ஆண்டாக முன்னணியில் உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையிலான திட்டங்களை அறிமுகம் செய்வதில் ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி 3 வது ஆண்டாக முன்னணியில் இருப்பதாக நீல்சன் பேன் இந்தியா சார்பில் வாடிக்கையாளர் திருப்தி தொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. நீன்சன் ஆண்டுதோறும் நடத்தும் சர்வேலைக் கொண்டு தங்களின் தரத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்ததே இந்த வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் என ரிலையன்ஸ் லைப் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மலய் கோஷ் தெரிவித்துள்ளார். மொத்தம் 822 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு 1806 வாடிக்கையாளர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

பிளாக்பெரி மொபைல் சேவை தொடருமா

பிளாக்பெரி நிறுவனம் தமது மொபைல் சேவையை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செய்து கொடுக்காவிட்டால், அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் பிளாக்பெரிக்கு அனுமதி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுத்துள்ளன. இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெரி மொபைலில் இல்லை. இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து, பிளாக்பெரி நிறுவன சேவைகளையும் தனது கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கண்காணிப்பு தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், பிளாக்பெரி மொபைல் சேவைகளை தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வட்டியில் கடன் கொடுக்க‌ வ‌ங்கிக‌ளுக்கு ஆலோச‌னை

கடன் உதவி தரும் தனியார்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்ற பெயரில் வங்கிகளுடன் இணைந்து பணப்பரிவர்த்தனை புரிய அங்கீகாரம் தரலாம் என்று முன்னாள், "செபி' தலைவர் தாமோதரன் கூறினார். வங்கிகள் எல்லாருக்கும் கடன் தர முடியவில்லை. ஆனால், அவ்வப்போது கேட்டதும் பணம் தரக்கூடிய, "வட்டிக்கு பணம் தருபவர்கள்' அதிக வட்டி வசூலித்தாலும் பணம் தருகின்றனர். கிராமப்புறங்களில் இவர்கள் முக்கியமாக பணியாற்றுகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்த அளவு அவசரத்திற்கு கடன் பெறுபவர்கள் இரண்டு வட்டிக்கும் குறையாமல் தந்து பணம் பெறுகின்றனர். இவர்கள் வசதியாக கடன் பெற லைசென்சுடன், "வட்டிக்கு பணம் தருபவர்கள்' என்று தொழில் நடத்துபவர்களை வங்கிகளின் "வர்த்தக தொடர்பாளர்களாக ' ( பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்) நியமிக்கலாம் என்று முன்னாள், "செபி' அமைப்பின் தலைவர் தாமோதரன் யோசனை கூறினார். அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கித் தகவலின் படி நாட்டில் உள்ள மொத்த மக்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே வங்கிக்கணக்கு வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அதிக வங்கிக் கிளைகள் மட்டும் திறப்பதால் மிகவும் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு கடன் வசதி கிடைக்க வழியில்லை. அதே சமயம் கிராமங்களில் சிறு சிறு அமைப்புகளிடம் வாங்கும் கடன் உதவிக்கு 27 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இப்படி பணம் தருபவர்களை மக்கள் நம்பித்தான் வாழவேண்டும். மாறாக வங்கிகள் சேவை சிறக்கவும், இம்மாதிரி லைசென்சுடன் பணம் தருபவர்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்று நியமிக்கலாம். இவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு டிபாசிட் சேகரிப்பது, பரஸ்பர முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துதல், மற்றும் சிறிய அளவிலான கடன் தருவது ஆகியவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம் வட்டி அளவு குறையும். இது வங்கி நடைமுறைகள் கடைசி மட்டத்தில் உள்ள மக்களுக்கு அடையவும் உதவிடும். வங்கி நடைமுறைகள் சிறக்க உதவும். இவ்வாறு தாமோதரன் கூறினார்.

அமரராஜா குழுமமத்தில் புதிதாக 3 ஆயிரம் பேர் நியமனம்

ஆட்டோமோடிவ் பேட்டரி தயாரிப்பில் தேசிய அளவில் முடிசூடா மன்னனாக விளங்கும் அமரராஜா நிறுவனம், வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்தவும், நிறுவனத்தின் வருவாயை 2 பில்லியன் அமெரி்க்க டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமரராஜா நிறுவன மனி்தவள மேம்பாடு பிரிவின் துணை தலைவர் ஜெய்கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனத்தின் தற்போதைய அளவில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், நிறுவனத்தின வருவாய் ரூ. 2 ஆயிரம் ‌கோடியாக உள்ளதாகவும், தற்போதைய அளவில், தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள தங்கள் நிறுவனம், 2025ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் பார்சூன்500 (அதாவது தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில்) இடம்பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், நிறுவனத்தில் 55 முதல் 60 சதவீதம் வரை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், வளர்ச்சி சாத்தியப்படவேண்டுமென்றால், அதற்கு அதிகப்படியான ஊழியர்கள் தேவை என்றும், அதற்காகவே, வரும் 5 ஆண்டுகளுக்குள், புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும், நிறுவனத்தின் நிகர வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்( இந்திய மதிப்பில் ரூ. 9,300 கோடி) ஈட்ட திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDFC லைப் இன்சூரன்ஸ் பிரிமிய வருவாய் உய‌ர்வு

இந்தியாவின் முன்னணி தனியார் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எச்.டீ.எஃப்.சி. ஸ்டாண்டர்டு லைஃப் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு 2010-11-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், புதிய பிரிமிய வருவாயாக ரூ.692.70 கோடியை திரட்டி உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் திரட்டப்பட்ட தொகையை விட 63 சதவீதம் (ரூ.424.90 கோடி) அதிகம் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரி தெரிவித்தார். ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் தனியார் துறையில் இந்நிறுவனம் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 7.4 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிறுவனம் அதன் செலவினங்களை குறைத்ததையடுத்து, வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற காலாண்டில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிகம் ரூ.1,478.90 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டை விட 47.8 சதவீதம் (ரூ.1,000.50 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட பிரிமிய வருவாய் 38.3 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.548.80 கோடியிலிருந்து ரூ.758.90 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் - ஜுன் காலாண்டு நிலவரப்படி, இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 116 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.22,298 கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2009-ஆம் ஆண்டின் இதே காலாண்டு இறுதியில் ரூ.10,307 கோடியாக இருந்தது என சவுத்ரி மேலும் தெரிவித்தார்.



ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு கிலோ மல்லிகை 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஸ்ரீவில்லிப்புத்தூர், ரெட்டியப்பட்டி, மல்லி, வலையப்பட்டி, பாறைப்பட்டி உட்பட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை மல்லிகை கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. திருவோணம் பண்டிகையொட்டி நேற்று கிலோ மல்லிகைப்பூ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயி நாகராஜன் கூறியதாவது: கடந்த மாதத்தை விட மல்லிகை பூவிற்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. திருவோணம், திருமணம் நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த விலையேற்றம் இந்த மாதம் முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

'விஸ்கி' போட்டால் கார் ஓடுமா

இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எடின்பெர்க்கில் உள்ளது நேப்பியர் பல்கலைக்கழகம். தாவர எரிபொருள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞானி மார்ட்டின் டாங்னி தலைமையிலான குழுவினர், விஸ்கியை ஆராய்ந்தனர். அதில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ‘பாட் ஆல்’, தானியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ‘ட்ராப்’ ஆகிய 2 மூலப்பொருட்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு சர்வதேச காப்புரிமையும் பெற்றுள்ளனர். விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதுபற்றி மார்ட்டின் டாங்னி கூறியதாவது: இந்த பயோ-ச்ட்ணீ;ப்யூயலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 5 10 சதவீதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவு மிச்சம் செய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும். விஸ்கி தயாரிப்பில் பயன்படும் 2 மூலப்பொருட்கள் மட்டுமே இவை என்பதால் செலவும் குறைவாகவே இருக்கும் என்றார்.



ஏ.டி.எம் சேவையில் மக்கள் அதிருப்தி

நாட்டில் உள்ள ஏ.டி.எம்.,களில் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) 41 சதவீதம் பழுதடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து 'செபி'யின் முன்னாள் தலைவர் தாமோதரன் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வரும் நுõற்றுக்கணக்கான புகார்களில் 41 சதவீதம் ஏ.டி.எம்., மையங்களைப் பற்றியதாக உள்ளது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கணக்கு காட்டும் ஏ.டி.எம்., பணப்பரிவர்த்தனை, பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் தெரிவிக்கும் அவலமும் உண்டு; இது குறித்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுவதில்லை என பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசுடமையாக்கப்பட்ட 26 வங்கிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை; ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். சிறிய அளவிலான வங்கிகள் பெரிய அளவிலான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்ட நிறுவனம் உள்நாட்டு வங்கிகளில் அதற்கான பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. அதற்கு வசதியாக வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றார்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவு

நடப்பு ஆண்டு ஜுலை மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, முந்தைய ஜுன் மாதத்தைக் காட்டிலும் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக இது சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூ3ஜி' செல்போன் அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலத்தைப் பெற நிறுவனங்கள் சென்ற ஜுன் மாதத்தில் வங்கிகளிடமிருந்து அதிக அளவில் கடன்களை பெற்றன. மேலும், முன்கூட்டிய வரியைச் செலுத்துவதற்கு வங்கிகளுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், வங்கிகள் அம்மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து அதிக தொகையை விலக்கி கொண்டன. இதனையடுத்து, சென்ற ஜுன் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 16 சதவீதம் (ரூ.1.27 லட்சம் கோடி) சரிவடைந்து ரூ.6,75,858 கோடியாக குறைந்தது. இது, ஜுலை மாதத்தில் ரூ.10,291 கோடி குறைந்து ரூ.6,65,567 கோடியாக சரிவடைந்துள்ளது. பல பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ள நிலையில், அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் மிஹீச்சுவல் ஃபண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 0.85 சதவீதம் அல்லது ரூ.859 கோடி அதிகரித்து ரூ.1,02,179 கோடியாக உயர்ந்துள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அடிப் படையில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. முன்னணி நிறுவனங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள எச்.டீ.எஃப்.சி. எம்.எஃப்., ஐ.சி.ஐ.சி.ஐ. எம்.எஃப். ஆகியவற்றின் சொத்து மதிப்பு முறையே 2.33 சதவீதம் 6.88 சதவீதம் சரிவடைந்து ரூ.84,628.20 கோடி மற்றும் ரூ.68,715.11 கோடி யாக சரிவடைந்துள்ளது. ஹீ.டி.ஐ. பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,238 கோடி குறைந்து ரூ.62,207.57 கோடியாக சரிவடைந்துள்ளது. பிர்லா சன்லைஃப் பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பில் 2.50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டக் மகிந்திரா எம்.எஃப். மற்றும் எல்-டி எம்.எஃப். ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் முறையே ரூ.1,051 கோடி மற்றும் ரூ.307 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஆக, சென்ற ஜுலை மாதத்தில் 39 பரஸ்பர நிதி நிறுவனங்களில் 19 நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Monday, August 16, 2010

நடப்பு நிதியாண்டில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

நடப்பு நிதி ஆண்டில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,000 கோடி டாலர் (சுமார் ரூ.1.80 லட்சம் கோடி) மதிப்பிற்கு உயரும் என பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டில் 3,270 கோடி டாலராக இருந்தது. ஆக, நடப்பாண்டில் இச்சாதனங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,050 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஜுன் மாதத்தில் நம் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் ஜுன் மாதத்தை விட, 90 சதவீதம் உயர்ந்து 510 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 30.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

அர‌சு மானிய‌ம் கிடைக்காத‌தால் கதர் விற்பனை மந்தம்

சுதந்திர தின விழாவையொட்டி காதி பொருட்களுக்கு அரசின் தள்ளுபடி சலுகை வழங்காததால் கதர் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட சர்வோதய சங்கங்கள் மூலம் 10 ஆயிரம் சர்வோதயா நிறுவனங்கள், காதி பவன்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வோதயா நிறுவனங்களில் காமராஜர், அண்ணாதுரை, பெரியார், இந்திரா பிறந்த நாள் விழாக்கள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் என ஆண்டுக்கு 90 நாட்களில் கதர், பாலி வஸ்திரா, கம்பளி துணி களுக்கு 30 சதவீதம், பட்டுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுவது வழக்கம். தள்ளுபடி தொகையை சம்மந்தப்பட்ட சர்வோதயா சங்கங்களுக்கு மத்திய அரசு 20 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் மானியமாக வழங்கி விடும். இதனால் கதர் பொருட் களை பயன்படுத்துவோர், சலுகை நாட்களில் அதிகளவில் பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் 12வது நிதி கமிஷனின் புதிய உத்தரவால் காதி பொருட்கள் விற்பனைக்கு தள்ளுபடி இல்லை. இம்மானியத்தை நுõற்போர், நெய்வோர்களுக்கு வழங்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் சர்வோதயா சங்கங்கள் இந்த ஆண்டு முதல் தள்ளுபடி சலுகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு சுதந்திர தினவிழாவிற்கும் காதி பொருட்களுக்கு தள்ளுபடி சலுகை கிடைத்தது. கால மாற்றத்திற்கு ஏற்ப ஜவுளி நிறுவனங்கள் வித, விதமாக துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் நிலையில் இவற்றுடன் போட்டி போட முடியாமல் சர்வோதய சங்கங்கள் தள்ளாடி வருகின்றன.

இந்நிலையில் முக்கிய நாட்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்காததால் ஏற்கனவே காதி பொருட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடுகிறது. இதனால் காதிபவன்களில் கதர் உள்ளிட்ட இதர பொருட்கள் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. மத்திய அரசு புதிதாக அறிவித்த தள்ளுபடி மானியம் நெசவாளர்களுக்கும் முறையாக சென்றடையவில்லை. காதிப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும் மானியம் இல்லை. வழக்கம் போல் தள்ளுபடி சலுகை வழங்கினால்தான் கதர் ஆடை உடுத்துபவர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என காதி விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.

மாருதி சுசுகி புதிய சாதனை

மாருதி சுசுகி நிறுவனம், இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் (சி.என்.ஜி.,) மூலம் இயங்கும் கார்களை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். இவ்விழாவில், மாருதி குழும அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இயற்கை எரிவாயு தொழில்நுட்பம், மாருதியின் எஸ்.எக்ஸ்.4, எக்கோ, வேகன் ஆர், எஸ்டிலோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகைக் கார் இன்ஜின்களில் 'இன்டெலிஜன்ட்- கேஸ் போர்ட் இன்ஜெக்ஷன்' என்ற புதிய தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புரோக்கர்களுக்கு 'செபி' எச்சரிக்கை

முதலீட்டாளர்களின் வர்த்தக் கணக்குளில் இருந்து பணத்தை புரோக்கர்கள் தவறுதலாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, முதலீட்டாளர்களின் பயன்படுத்தாத பணத்தை திருப்பியளித்து விடவேண்டும் என்று 'செபி' எச்சரித்துள்ளது. முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்குகளில் இருந்து, புரோக்கர்கள், பங்குச் சந்தை நிலவரத்தை பொருத்து முதலீடு செய்வர். ஆனால், முதலீடு செய்தது போக மிச்சமுள்ள பணத்தை தவறுதலாக கையாள்வதாக புகார்கள் வந்தன.



இதையடுத்து, 'செபி' பங்குச் சந்தை புரோக்கர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் தேர்வுப்படி, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, வாடிக்கையாளர்களின் பயன்படுத்தப்படாத பணம் உள்ளிட்ட அவர்களின் மொத்த வர்த்தகக் கணக்கையும் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். வர்த்தகக் கணக்குடன் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இனி புரோக்கர்கள் மிச்சமுள்ள பணத்தைச் செலுத்தி விட வேண்டும். இ-பேங்கிங் வசதி இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 'செக்' மூலம் பணத்தை அனுப்பி விட வேண்டும். இதன் மூலம், புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். மேலும் முதலீட்டாளர்களின் பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.

வட்டி உயர்வு குறித்து ஸ்டேட் பாங்க் விரைவில் அறிவிப்பு

"முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யும்" என்று அந்த வங்கியின் தலைவர் ஓ.பி.பட் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கியின் சொத்துக் கடன்களுக்கான கமிட்டி (அல்கோ) இன்னும் ஓரிரு நாட்களில் கூடும். வங்கியின் காலாண்டு அறிக்கை வெளிவந்துள்ள இந்நிலையில், வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசிப்போம். அனைத்து வங்கிகளும் தங்கள் வைப்பு நிதி மற்றும் முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டன. அதனால் 0.25 சதவீதம் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்' என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் கனரா வங்கி ஆகியவை தங்கள் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வர்த்தகக் கூட்டமைப்பு பரிந்துரை

"உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 8 சதவீதத்தை எட்ட வேண்டுமானால், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று, தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ) கூறியுள்ளது. தற்போது இந்தியாவில், அமைப்பு சாரா துறைகளையும் சேர்த்து, மொத்தம் 45 கோடியே 70 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2022க்குள் இந்தியா, 8 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய 50 கோடி திறன் மேம்பாடுடைய பணியாளர்கள் இந்தியாவுக்குத் தேவை. இத்தேவையை எதிர்கொள்வதற்கு, எப்.ஐ.சி.சி.ஐ, சில ஆலோசனைகளைக் கூறியுள்ளது.



இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்குத் தேவையான 50 கோடி பணியாளர்களை உருவாக்க தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது ஒவ்வொரு ஆண்டும், திறன் மேம்பாடு உடைய பணியாளர்கள் 34 லட்சம் பேர் மட்டுமே பணியில் சேர்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை எட்ட வேண்டும். அதற்கு திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாகன உதிரிபாகங்கள், ரியல் எஸ்டேட், சுகாதாரத் துறை, ஜவுளித் துறை, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பொருளாதார வளர்ச்சியிலும், கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியிலிருந்து வாயு எடுக்க கோல் இந்தியா புதிய முய‌ற்சி

மத்திய அரசின், 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.



இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.

Friday, August 6, 2010

எஸ்பிஐ-யில் புதிதாக 5,000 முகவர்கள்

தனியார் துறையைச் சேர்ந்த எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறப்பான செயல்பாட்டை கண்டு வரும் இந்நிறுவனம் அதன் ஒருங்கிணைப்பு சேவையை விரிவுபடுத்தும் வகையில் இவ்வாண்டு கூடுதலாக 20-25 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக 5,000 முகவர்களை பணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் முகவர்களின் எண்ணிக்கை தற்போதைய 70,000 -ல் இருந்து 75,000-ஆக அதிகரிக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எம்.என். ராவ் தெரிவித்தார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.114 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 195 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 9.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,707 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் புதிய பிரிமியம் வாயிலான வருவாய் ரூ.976 கோடியாகும். குழும காப்பீடு வாயிலான வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. நிறுவனத்தின் செலவினம் இத்துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே செலவினங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை என ராவ் குறிப்பிட்டார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,350 கோடியாக உள்ளது. இதில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.1,000 கோடியாகும். இது தவிர லாபத்திலிருந்து ரூ.350 கோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே நிறுவனத்தின் நிகர மதிப்பு நல்ல அளவில் உள்ளதால் புதிதாக மூலதனம் இட வேண்டிய அவசியமில்லை என ராவ் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் உற்பத்தி 7 சதவீதம் உயர வாய்ப்பு

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.60 கோடி டன்னுக்கு அதிகமாக இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது, 7 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்றாலும், சென்ற நிதி ஆண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை (3.80 கோடி டன்) விட குறைவானது. அடுத்த சில ஆண்டுகளுக்கு உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி சற்றே மந்தமடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி 1.8 சதவீதம் குறைந்தது. சென்ற நிதி ஆண்டில் இது 0.5 சதவீதம் என்ற அளவில் மிக குறைவான வளர்ச்சி கண்டது. அவ்வாண்டில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3.37 கோடி டன்னாக இருந்தது. இதனையடுத்து 3.80 கோடி டன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு எட்டப்படவில்லை. கெய்ரன் நிறுவனத்தின் பார்மர் எண்ணெய் வயலில் (ராஜஸ்தான்) உற்பத்தி தாமதம் ஆனதே இதற்கு முக்கிய காரணமாகும். நடப்பு நிதி ஆண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கிய சுரங்கத் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு ஏன்?

பருவ மழையும், காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றன. ஆகவே, சந்தையும் முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. 18,000 என்ற தடையை தாண்டி சந்தை ஜோராக போய்க்கொண்டிருக்கிறது. திங்களன்று, 212 புள்ளிகளும், செவ்வாய், 34 புள்ளிகளும் கூடியிருந்தது. புதனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 102 புள்ளிகள் கூடி, 18,217 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 28 புள்ளிகள் கூடி, 5,467 புள்ளிகளுடனும் முடிந்தது. வங்கிப் பங்குகள் சந்தை ஏறுவதற்கு பெரிய உறுதுணையாக இருந்தன. குறைந்து வரும் மியூச்சுவல் பண்டு



முதலீடுகள்: ஜூலையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் 11,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. நிறைய முதலீட்டாளர்கள் பணம் எடுத்தது தான் காரணம். தற்போது எல்லா மியூச்சுவல் பண்டுகளிலும் சேர்த்து, 6,66,667 கோடி ரூபாய் உள்ளது. பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்ததாலும் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.

கூடிவரும் டிபாசிட் வட்டி விகிதங்கள்: வரும் வாரங்களில் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடும், அது டிபாசிட்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று கூறியிருந்தோம். அதன்படியே பல வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை கூட்டி உள்ளன. ஐந்தாண்டு டிபாசிட்டுக்கு தற்போது 8 சதவீதம் வரை கிடைக்கிறது. மூத்த குடிமகன்களுக்கு 0.5 சதவீதம் வட்டி கூடுதலாக கிடைக்கும். இன்னும் சிறிது கூடவும் வாய்ப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிவிப்புகளை வைத்து வட்டி விகிதங்கள் கூடலாம்.


காலாண்டு முடிவுகள்: என்.எம்.டி.சி., கெயில், ஹிண்டால்கோ ஆகிய கம்பெனிகள் நல்ல முடிவுகளை தந்துள்ளன. அதானி வாங்கிய ஆஸ்திரேலிய கம்பெனி: பல துறைகளில் இருந்து வரும் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கம் ஒன்றை, 12,600 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளது. அதானி பவர் நிறுவனத்திற்கு தொடர்ந்து எரிபொருள் கொடுக்க இந்த சுரங்கம் வழிசெய்யும்.


தங்கம் ஏன் சிறிது கூடியது? சீனாவில் வங்கிகள் தங்கம் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற செய்தி வந்ததை அடுத்து தங்கம் விலை சிறிது கூட ஆரம்பித்தது. மேலும், இந்திய வணிகர்கள், தங்கம் விலை குறைந்துள்ளதால் வாங்கவும் ஆரம்பித்தனர். இது சந்தையில் தங்கத்தின் விலையை கூட்டியது.


டாலர் ரூபாய்: டாலருக்கு எதிரான ரூபாய் வலுப்பெற்று வருகிறது. 46 ரூபாய்க்கு அருகே வந்து விட்டது. மறுபடி ஏற்றுமதியாளர்களுக்கு கவலையளிக்கக் கூடிய தருணங்கள் தான். இப்படி மாறி மாறி மேலும் கீழும் இருப்பதால் ஏற்றுமதியாளர்களாலும் சரிவர கணிக்க இயலவில்லை.


ஏன் ரூபாய் வலு பெற்றது? இந்தியாவிற்குள் வெளிநாட்டுப் பணவரத்து அதிகமாக உள்ளது. இது சந்தையில் டாலரை வலுவிழக்க செய்கிறது. அதே சமயம் ஜூன் மாத ஏற்றுமதி கடந்தாண்டு ஜூன் மாத ஏற்றுமதியை விட, 30 சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஜூனில் 17.74 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.

புதிய வெளியீடுகள்: பஜாஜ் கம்பெனியின் ஒரு அங்கமான பஜாஜ் கார்ப் (அல்மாண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்) தங்களது புதிய வெளியீட்டை கொண்டு வந்துள்ளது. இன்று வரை இருக்கும். விலை ரூபாய் 630 முதல் 660 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் கம்பெனி என்பதால் சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.


இது தவிர இன்ஜினியர்ஸ் இந்தியா தனது வெளியீட்டின் விலையை ரூபாய் 290 என்றும், எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் தன் வெளியீட்டின் விலையை 985 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். பட்டியலிடப்படும் போது இரண்டு கம்பெனிகளும் லாபத்தில் பட்டியலிடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை ஜம்மென 18,000த்தை தாண்டி விட்டது. இந்நிலையில் நிலைத்து நிற்க வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டுப் பணம் சந்தைக்குள் வருவதால் சந்தை பெரிய இறக்கங்களை சந்திக்க வாய்ப்பில்லை.

ஹுண்டாய் தொழிற்சாலையின் அபார வளர்ச்சி

''சென்னை தொழிற்சாலையில் 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளோம்' என்று ஹுண்டாய் நிர்வாக இயக்குனர் பார்க் தெரிவித்தார்.



ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 30 லட்சமாவது கார் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தொழிற்சாலை உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அரவிந்த் சக்சேனா முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் எச். டபிள்யூ பார்க், 30 லட்சமாவது காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஹுண்டாய் கார் தொழிற்சாலை 1996ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு கட்டப்பட்டது. 1998ம் ஆண்டு சிறிய ரக சான்ரோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிய ஒரு லட்சம் கார்கள், 2001ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு லட்சம், 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து லட்சம் என படிப்படியாக உயர்ந்து, மார்ச் 2006ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 லட்சம் கார்களை தயாரித்தோம். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 லட்சமாவது காரை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளோம்.





இங்கு உற்பத்தியாகும் கார்களில் 48 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனம் இந்திய அளவில் கார் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு கார் தயாரிக்கப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனத்தில் கார்களுக்கான பராமரிப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கி.மீ., வரையில் பராமரிப்பு செலவு வாடிக்கையாளர்களுக்கு இல்லை. மோட்டார் உத்தரவாத திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 294 விற்பனை மையங்கள் உள்ளன. 586 சர்வீஸ் சென்டர் மூலம் வாடிக்கையாளர்களின் கார்களை பராமரித்து வருகிறோம். இவ்வாறு பார்க் தெரிவித்தார். பொது மேலாளர் ரமேஷ், முதன்மை பாதுகாப்பு அலுவலர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஸ்ரீதர், சத்தியசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க‌ த‌னி கோர்ட்

''வர்த்தக கோர்ட்டுகளை துவக்குவதற்கான மசோதா, பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்,'' என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான தொகை சார்ந்த, வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இதற்காக, 'ஐகோர்ட்டுகளின் வர்த்தகப் பிரிவு மசோதா 2009' பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும். இந்த வர்த்தக கோர்ட்டுகள் எல்லாம் ஐகோர்ட்டுகளின் டிவிஷன் பெஞ்சாக செயல்படும். கடந்த 1991ம் ஆண்டிலேயே பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக ரீதியான தகராறுகளைத் தீர்ப்பதற்கான நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இந்தியாவில் சட்ட ரீதியாக பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனில், நிறைய கால அவகாசமாகும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். ஐகோர்ட்டுகள் வர்த்தகப் பிரிவு மசோதா 2009 நிறைவேறினால், வழக்கு விவகாரங்களில் புதிய சகாப்தம் உருவாகும். கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில், எந்த வழக்கும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தேங்கி நிற்காத நிலைமை உருவாக்கப்படும். 'நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க 300 ஆண்டுகளுக்கு மேலாகும்' என, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஒருவர் கூறியுள்ளார். இது, நம்பிக்கை இல்லாத மனப்பான்மையைக் காட்டுகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து ஓடுவது போன்றதாகும். இவ்வாறு மொய்லி கூறினார்.

மொபைல்போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌ன்ஸ்

மொபைல் போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌னை இன்னும் 12 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக மேக்ஸ் செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மேக்ஸ் செக்யூர் சாப்ட்வேர்ஸ் நிறுவன நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் பிரதான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் இதுவரை, தங்கள் மொபைல் போன்களை கம்ப்யூட்டரின் துணையுடன் ஆன்டிவைரஸ் சாப்டவேரின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்ததாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, இன்னும் 12 மாதங்களில் மொபைல் ‌போன்கள் தங்களுக்குள்ளேயே ஸ்கேன் செய்யும் அளவிற்கு ஆன்டி வைரஸ் சொல்யூசனகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, இந்த நிதியாண்டில் 100 பே‌ரை புதிதாக பணியமர்த்த உள்ளதாக சஞ்சய் பிரதான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எஸ்டிடி அழைப்பு இனி நிமிடத்திற்கு 30 பைசா ம‌ட்டும்

இந்தியாவின் முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான டாடா டெலிசர்வீஸ் நிறுவனம், எஸ்டிடி அழைப்புகள் நிமிடத்திற்கு 30 ‌பைசாவும், லோக்கல் அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா எனும் புதிய டாரீப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ரா பிளான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தைப் பெற, ப்ரீபெய்டு உபயோகிப்பாளர்கள், ரூ. 58 மற்றும் ரூ. 104 ரீசார்ஜ் செய்வதன் மூலம், 3 மாதத்திற்கு இந்த பயனை அனுபவிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 4, 2010

சச்சினின் புதிய சாதனை



டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக் கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.

இது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த 20 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் பல்வேறு மாற்றங்கள் அடைந்து உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் தன்மையும் மாறி விட்டது. "டுவென்டி-20' போட்டிகளின் வரவுக்குப் பின், டெஸ்ட் போட்டிகளும் அதிரடிக்கு மாறி விட்டன. கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முன்னணி பவுலர் களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொண்டது சற்று வித்தியாசமாக இருந்தது. இது தான் எனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என மனதில் நினைத்தேன். ஆனால் அடுத்த போட்டியில், சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதற்குப் பின் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

மிகப்பெரிய கவுரவம்: "சச்சின் என்னைப் போலவே பேட்டிங் செய்கிறார்,'என ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தெரிவித்ததை, கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதற்குப் பின் பிராட்மேன் தேர்வு செய்த உலக லெவன் வீரர்கள் பட்டியலில் என்னையும் இணைத்தது, புதிய உற்சாகத்தை அளித்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு, தலைசிறந்த வீரர்களின் பாராட்டு தன்னம்பிக்கை கொடுக்கும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


தகர்க்க முடியாது: சைமண்ட்ஸ்: அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சாதனையை இனி யாரும் தகர்க்க முடியாது என்றார் ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ். இது குறித்து அவர் கூறுகையில், "" சச்சினின் சாதனை பாராட்டுக்குரியது. அவரது சாதனையை இனி யாரும் நெருங்க முடியாது என நினைக்கிறேன். தற்போது கிரிக்கெட் விளையாடத் துவங்கி உள்ளவர்கள், இனி 160 முதல் 170 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது சந்தேகம் தான்,'' என்றார்.

பேங்க் ஆப் பரோடாவின் நிகரலாபம் ரூ.859 கோடி

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.859.16 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.685.38 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் வட்டி வருவாய் ரூ.4,032.11 கோடியிலிருந்து ரூ.4,726.96 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வட்டிச் செலவினம் ரூ.2,827.41 கோடியிலிருந்து ரூ.2,868.97 கோடியாக அதிகரித்துள்ளது.



ஷிப்பிங் கார்ப்பரேஷன்ஸின் இரண்டாவது பங்குகள் வெளியீடு

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டில், இந்நிறு வனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்கு களுடன், புதிய பங்குகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு கப்பல்கள் சேவையில் ஈடுபட்டு வரும் எஸ்.சி.ஐ. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 80.12 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் எல்.ஐ.சி. நிறுவனத்திடமும், மீதமுள்ள 3.15 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசமும் உள்ளன. மத்திய அரசு, அதன் நிதி பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு நிதி ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.40,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், எஸ்.சி.ஐ. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எஸ்.சி.ஐ.யின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வேண்டி, மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த நிலையில், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் ரூ.191 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.120 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.883 கோடியிலிருந்து ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது.





பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய ஆவல்

பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் "செர்ன்' என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் "டெவட்ரான்' என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
சுவிஸ் - பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் "ஜீரோ' டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் "எலக்ட்ரான் ஓல்ட்' ஆற்றல் ஏற்பட்டது. "செரன்' அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், "பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.
இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து "செரன்' தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த "இயற்பியல் உயர் சக்தி' என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். "செரன்' சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்' என்றார்.

"கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.



நன்றி:தினமலர்



இரண்டாவது முறையாக எண்ணெய் விலை கிடுகிடு

எண்ணெய் வித்துக்களின் தட்டுப்பாட்டால் விலையேற்றமடைந்த எண்ணெய் விலை, மின் கட்டண உயர்வு அமலான மறு நிமிடமே, இரண்டாவது முறையாக மேலும் உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஜல்லிக்கரை, ஆந்திராவின் கடப்பா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு நிலக்கடலை வந்து கொண்டிருந்தது. வரத்து தற்போது முற்றிலும் நின்று விட்டதோடு, நிலக்கடலையின் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு, அப்படியே எண்ணெயில் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துக்களின் விலை உயர்வால், எண்ணெய் விலை லிட்டருக்கு இரண்டு முதல்மூன்று ரூபாய் வரை உயர்ந்தது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து எண்ணெய் விலை,நேற்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை கடைசி வாரம், லிட்டர் 76 ரூபாய்க்கு விற்பனையான கடலை எண்ணெய், ஐந்து ரூபாய் அதிகரித்து 81 ரூபாயானது. நேற்று இதன் விலையில் மேலும்இரண்டு ரூபாய் அதிகரித்து, லிட்டர் 83 ரூபாய்க்கு விற்கிறது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின் 1,215 ரூபாய்க்கு விற்றது, 1,245 ரூபாய்க்கு விற்கிறது. ரீபைன்ட் கடலை எண்ணெய், கடந்த வாரம் நான்கு ரூபாய் அதிகரித்து 89 ரூபாய் விற்றது; நேற்று மேலும் இரண்டு ரூபாய் அதிகரித்து, 91 ரூபாய்க்கு விற்கிறது.

கடலை எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சூரிய காந்தி எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், லிட்டர் 55 ரூபாய்க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், ஆறு ரூபாய் நேற்று உயர்ந்து, 61 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல் 15 லிட்டர் கொண்ட டின், 825 ரூபாய்க்கு விற்றது, 915 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த வாரம் வரை 43 ரூபாய்க்கு விற்ற பாமாயில், நேற்று 45 ரூபாயானது. ஆனால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 
எண்ணெய் வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, கடந்த வாரம் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த அடுத்த நிமிடமே எண்ணெய் ஆலைகள், தங்களின் தயாரிப்புகளுக்கான விலையை ஏற்றின. கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை, இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை சீசன் துவங்க உள்ள நிலையில், எண்ணெய்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.



பசப்பும் "பிளாக்பெர்ரி"

''பிளாக்பெர்ரி மொபைல்போன்களில் பரிமாறப்படும் தகவல்களை இந்திய அரசு கண்காணிக்கும் வகையில், சர்வரை மாற்றி அமைக்குமாறு கேட்டிருந்த அந்நாட்டு கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை,'' என, 'ரிம்' நிறுவனம் கூறி விட்டது. இந்த பசப்பு பதிலால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் எழுவதால், மொபைல் போன்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும், இந்திய அரசு கண்காணித்து வருகிறது. கனடா நாட்டிலுள்ள, 'ரிம்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பிளாக்பெர்ரி' மொபைல்போனை, லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 'பிளாக்பெர்ரி' மொபைல் மூலம் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும் வசதி இந்தியாவிடம் இல்லை. இந்த போனுக்கான சர்வர் கனடாவில் உள்ளதால், இதன் பிரத்யேக குறியீடுகளை கண்காணிக்க, அந்த சர்வரில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இந்தியாவில் ஒரு சர்வர் நிர்மாணிக்க வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம், 'ரிம்' நிறுவனத்திடம் கேட்டிருந்தது. முதலில் தயங்கிய இந்நிறுவனம், 'அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தனியாக சர்வர் அமைத்துள்ளீர்கள். எங்களுக்கு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தரவில்லையெனில், இந்தியாவில் 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் செயல்பாடுகளை முடக்கி விடுவோம்' என, இந்தியா எச்சரித்ததை அடுத்து, வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறியது. ஆனால் நேற்று, தன் நிலையிலிருந்து 'ரிம்' நிறுவனம் பின் வாங்கி விட்டது.

அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை. 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் பரிமாறப்படும் தகவல்களை, கண்காணிப்பு ஏஜன்சிகள் மட்டுமல்ல; எங்களால் கூட படிக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே இது போன்ற பாதுகாப்பு வடிவமைப்பை, மொபைல்போன்களில் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'ரிம்'மின் இந்த அறிக்கையால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில், 10 லட்சம் 'பிளாக்பெர்ரி' மொபைல் உள்ளதென்பதால், அரசுக்கு கூடுதல் பிரச்னை எழுந்திருக்கிறது.

கெரசின் லிட்டருக்கு ரூ.11.50

தமிழகத்தில் ரேஷனில் வழங்கப்படும் கெரசின் விலை அதிரடியாக லிட்டருக்கு, மூன்று ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. லிட்டர் 11.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு, ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் கெரசின் வழங்கப்படுகிறது. சிலிண்டர் அல்லாத குடும்ப அட்டைகளுக்கு 10 லிட்டரும், ஒரு சிலிண்டர் அட்டைகளுக்கு மூன்று லிட்டரும், விடுபட்டு, புதிதாக வழங்கப்பட்ட அட்டைகளுக்கு மூன்று லிட்டர் என கெரசின் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் ஒரு லிட்டர் 8.40 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப ஒன்பது ரூபாய் வரையும் விற்பனையானது. தற்போது கெரசின் விலை திடீரென லிட்டருக்கு மூன்று ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் 11.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, 'மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதால், கெரசின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் லிட்டர் 11.50 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப 12 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றனர்.





Friday, July 30, 2010

பிராவிட‌ன்ட் நிதி திட்ட‌த்தில் புதிதாக இ-பேமெண்ட் முறை

தேசிய மின் பண பரிவர்த்தனை மற்றும் வங்கி ஒருங்கிணைப்பு கோர் பேங்கிங் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் , தனது பயனாளிகளுக்கு இ - பேமெண்ட் முறையில் பணம் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இரண்டொரு நாட்களில் வங்கி கணக்குகளில் பயனாளிகள் பணம் பெறலாம். இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு புத்தக்தின் முதல் பக்க நகலில், கையெழுத்துடன் சுய உறுதி அளிக்க வேண்டும் அல்லது க்ளைம் மனுவுடன் ஒருப்பிழப்பு செய்யப்பட்ட காசோலையின் நகலையும் வழங்கலாம். இதனால் பணம் உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் உறுப்பினர்கள் தங்களது மொபைல் போன் நம்பரையும் தெரிவிக்கவேண்டும். இதனால் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் தகவல்களை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.



மாற்றுத் திறனாளிகள் திருமண தம்பதியருக்கு 25ஆயிரம் நிதியுத‌வி

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். வருமான உச்ச வரம்பும் நீக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்யும் இயல்பான நிலையில் உள்ளவர்களை ஊக்குவிக்க, திருமண நிதியுதவித் திட்டம் 1986ல் துவக்கப்பட்டது. ஒரு மாற்றுத் திறனாளியை மற்றொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உள்ளதாக, முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வருமான உச்ச வரம்புத் திட்டத்தின் கீழ் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித் தொகை, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமாகவும், மீதத் தொகை தேசிய சான்றிதழ் பத்திரமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ஒரு கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்புக் கொஸ்டீன்ஸ்

ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பலர் பதிலளிக்கும் வகையில் அமையப்பெற்ற புதிய பகுதியை சோதனை முறையில் பேஸ்புக் இணையதளம் துவக்கியுள்ளது. ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அசுர வளர்ச்சி் பெற்றுள்ள சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளமான பேஸ்புக் இணையதளம், புதிய பகுதி ஒன்றை சோதனை முறையில் துவக்கியுள்ளது. பேஸ்புக் கொஸ்டீன்ஸ் என்ற முறையில் துவக்கப்பட்டுள்ள இந்த புதிய பகுதிக்கு 'டேப் இன்டூ தே கலெக்டிவ் நாலெட்ஜ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேஸ்புக் இணையதள புராடக்ட் மேனேஜ்மெண்டிற்கான இயக்குனர் பிளேக் ராஸ் கூறுகையில், இதன்மூலம், ஒரு கேள்விக்கு, பலவிதமான பதிலை பேஸ்புக் பயனாளர்கள் பெற முடியும் என்றும், தற்போது, இந்த சேவை சோதனைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இது விரிவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

டிஎன்பிஎல் நிறுவனத்தின் நிகரலாபம் உயர்வு

தமிழ்நாடு செய்தித்தாள்நிறுவனத்தின் லாபம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 290.11 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டின் வருமானம் 178.79 கோடி ரூபாய். இந்த காலாண்டில் வரிக்கு முன்லாபம் 55.18 கோடி ரூபாய்.கடந்த ஆண்டு முதல் காலாண்டின் வரிக்கு முன்லாபம் 10.88 கோடி ரூபாய்.இந்த காலாண்டில் வரிக்கு பின் லாபம் 39.87 கோடி ரூபாய். கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபம் 7.14 கோடி. எனவே,கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபத்தை விட 4.58 மடங்கு லாபம் உயர்ந்துள்ளது.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 64 ஆயிரத்து 537 டன் காகிதம் உற்பத்தி செய்துள்ளது.நடப்பு ஆண்டில், இந்நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக, செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் யுனைடெட் வங்கியுடன் கைகோர்ப்பு

இந்தியாவில் கார்களின் விற்பனையை அதிகரிக்க, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கைகோர்க்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவன கார்களை வாங்குவதற்கான நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்கள் இந்நிறுவனமும், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனையடுத்து தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இனி யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா கார் வாங்குவற்தகாக நிதியுதவி வழங்கும், இதன்மூலம் தங்கள் நிறுவன கார்கள் இந்தியாவில் பலதரப்பு மக்களை விரைவில் சென்றடையும் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Thursday, July 29, 2010

வர்த்தகம்

இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.

காலை 9.04 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.40 புள்ளிகள் குறைந்து 17942.97 ஆக வர்த்தகமாகியிருந்தது .

 தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.00 புள்ளிகள் குறைந்து 5392.55 ஆக வர்த்தகமாகியிருந்தது.

நிதிச்சுமையில் சிக்கி தவிக்கும் 'தங்கரத' ரயில்

தென்னிந்திய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கரத சொகுசு ரயில் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதால், தொடர்ந்து இயக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தென்னிந்திய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், 2007ம் ஆண்டு தங்கரத சொகுசு ரயில் (கோல்டன் சேரியாட்) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய 11 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இவற்றில் 44 தனித்தனி அறைகள் உள்ளன. இதில் 82 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் பயணம் செய்ய ஒரு நாள் கட்டணமாக லட்சத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக தங்கரத ரயில் திட்ட இயக்குனர் சீனிவாஸ் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தங்கரத ரயிலில் பயணம் செய்ய கட்டணம் அதிகமென்பதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. மேலும் உலக பொருளாதார சரிவு எதிரொலியால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த ரயில் ஏற்கனவே இரண்டு முறை மட்டுமே முழு கொள்ளவுடன் பயணம் செய்துள்ளது. ஏற்கனவே தங்கரத ரயில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ரயிலை ஒரு தடவை இயக்குவதற்கு 18.5 லட்ச ரூபாயை ரயில்வே துறை கட்டணமாக வசூலித்து வந்தது. இந்நிலையில் கட்டணத்தை ரயில்வே துறை திடீரென 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டது. ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் ரயில்வே துறை கட்டணத்தை உயர்த்தியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்கும் வகையில் ரயில்வே துறை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள், முதலமைச்சர் மற்றும் மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்குமென நம்புகிறோம். மேலும் கட்டணத்தை குறைக்கவும், பயண கட்டணத்தை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். 2009ம் ஆண்டில் உலக பொருளாதார சரிவு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற காரணங்களால் தங்கரத ரயில் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டது. மேலும் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தியதும், இத்திட்டத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இவ்வாறு சீனிவாஸ் கூறினார்.

ச‌ரிவில் த‌ங்க‌ம்

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்தது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1662 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.17870 ஆகவும் இருந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.31.00 க்கும், பார் வெள்ளி ரூ.28945 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

"ரெயின்ட்ரீ" ரூ.200 கோடியில் புதிய ஹோட்டல்

சென்னையைச் சேர்ந்த சீப்ராஸ் குழுமம், ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் துறையில் ஈடுபட்டு வருகிறது. 1970-ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், அண்ணாசாலையில், நந்தனத்தில் ரெயின்ட்ரீ என்ற அதன் இரண்டாவது ஹோட்டலை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் முதல் ரெயின்ட்ரீ ஹோட்டல் சென்னை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ளது. இது குறித்து இக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சி.சுப்பாரெட்டி கூறும்போது, 'புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரெயின்ட்ரீ ஹோட்டல் ரூ.200 கோடி செலவில் (நிலம் வாங்கியது உள்பட) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் 230 அறைகள் உள்ளன. இது தவிர, சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில், ரூ.200 கோடி திட்டச் செலவில், 200 அறைகளுடன் கூடிய மற்றொரு ஹோட்டலையும் உருவாக்கி வருகிறது. இந்த ஹோட்டல் திட்டத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கி உள்ளன. டெல்லியில் உள்ள பாதுகாப்பு இயக்குனரகத்தின் ஒப்புதல் நிலுவையில் உள்ளது'' என்று தெரிவித்தார். சீபிராஸ் குழுமம், கடந்த 27 ஆண்டுகளில், 170 ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், 4.50 லட்சம் சதுர அடியில் திட்டப் பணிகள் கைவசம் உள்ளன. டைடல் பார்க் அருகாமையில் 3.50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் 350 குடியிருப்புகள் திட்டம் ஓராண்டிற்குள் நிறைவடையும் என இக்குழுமம் தெரிவித்துள்ளது. இக்குழுமத்திற்கு சென்னை ஒரகடத்தில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஒரு நகரியத்தையும், வில்லா வகை குடியிருப்புகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், 40 ஏக்கரில் வர்த்த குடியிருப்பு திட்டம் ஒன்றையும் மேற்கொள்ள இருப்பதாக சுப்பாரெட்டி தெரிவித்தார். இக்குழுமத்தில் தற்போது 2,900 பேர் பணிபுரிகின்றனர். ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளின் வாயிலாக நடப்பு நிதி ஆண்டில், குழுமம் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இது, சென்ற நிதி ஆண்டில், ரூ.250 கோடியாக இருந்தது. செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் 105 அறைகள் உள்ளன. தற்பொழுது இவற்றில் 70 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் தங்கி வருகின்றனர். இந்த ஹோட்டல், சென்ற நிதி ஆண்டில் ரூ.35 கோடி வருவாய் ஈட்டி உள்ளது என அவர் மேலும் கூறினார்.

இன்டெல் சர்வர் கூலர் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான கிளாசியல்டெக் நிறுவனம், இன்டெல் சீரிஸ் சர்வர் கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், 3 வகை சர்வர் கூலர்களை அறிமுகம் செய்துள்ளது எனவும், அவை முறையே, போலாரிஸ் 7010 ( 1யு ரேக்மவுண்ட் பேசிவ்), போலாரிஸ் 7110 (1யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்) மற்றும் போலாரிஸ் 7120 ( 2யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்), இந்த சர்வர் கூலர்கள் இன்டெல் எல்ஜிஏ771 சர்வர் சிபியூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சர்வர் கூலர்கள் சிஎப்டி மற்றும் ஸ்கைவ்ட் பின் அல்லது ஸ்டாக்ட் பின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், போலாரிஸ் 7010, 680 கிராம் எடையுடனும், போலாரிஸ் 7120 746 கிராம் எடையுடனும், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வண்ண‌ம் உருவாக்கப்பட்டுள்ளதாக கிளாசியல்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றாலத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி

குற்றாலத்தில் மாவட்ட மகளிர் திட்ட சுய உதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் ஜெயராமன் திறந்து வைத்தார். குற்றாலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களை பார்வையிட்டார். மகளிர் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் முத்துமீனாள் முன்னிலை வகித்தார். முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் குற்றாலம் டவுன் பஞ்., தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி ராஜையா, ஆர்டிஓ சேதுராமன், தாசில்தார் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்.,) ஆமீனாள் பீவி, செங்கோட்டை வார்டு உறுப்பினர் சுசீலா, உதவி திட்ட அலுவலர் ஆண்டனி எட்வர்ட்சிங் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கிடும் வகையில் ஆயத்த ஆடைகள், அலங்கார பொருட்கள், மூலிகை பொருட்கள், பத்தமடை பாய் வகைகள், ஊஞ்சல்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள், மூங்கில் நாற்காலிகள் போன்ற பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.

வீடு,வாகன கடன் வட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக குறைந்த கால கடன் வழங்கல் மற்றும் பெறுதல் மீதான வட்டி விகிதங்களை இந்திய மைய வங்கி உயர்த்தியிருப்பதன் காரணமாக வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும். குறைந்த கால கடன் வழங்கல் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமும், குறைந்த கால கடன் பெறுதல் மீதான வட்டி விகிதத்தை 0.5 விழுக்காடும் மைய வங்கி உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த உயர்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்னகளின் மீது வணிக வங்கிகள் வசூலித்துவரும் வட்டி விகதமும் அதிகரிக்கும்.

Wednesday, July 28, 2010

பங்கு வர்த்தக நிலவரம்

பங்கு சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிந்தது.



இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 120.24 புள்ளிகள் சரிந்து 17957.37 புள்ளிகளாக இருந்தது.



நிஃப்டி 33.05 புள்ளிகள் சரிந்து 5397.55 புள்ளிகளாக இருந்தது.



இன்றைய பங்கு வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லாசன் அண்ட் டியூப்ரோ, என்டிபிசி, ஹச்யூஎல், ஐசிஐசிஐ ஆகியவற்றின் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் இன்றை பங்கு சந்தை சரிவில் முடிந்தது.

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

'பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மிகச் சிறிய அளவில் தான் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த அத்தகைய நடவடிக்கை தேவைப்படுகிறது' என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா விளக்கம் அளித்தார்.

நேற்று லோக்சபாவில், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும், அவர்களது கட்சி உறுப்பினர்களும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது:பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வு என்பது மிகச் சிறிய அளவு தான். எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது.சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை அதிகபட்சமாக 33 சதவீதமாகவும், டீசல் மீது 24.7 சதவீதமாகவும், மண்ணெண்ணெய் மீது 12.5 சதவீதமாகவும் நிர்ணயித்துள்ளன. இவ்வாறு அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.



140 அமெரிக்கா வங்கிகள் திவால்

நடப்பாண்டின் ஜுலை மாதத்தில் 23-ந் தேதி வரை, அமெரிக்காவில் மொத்தம் 17 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற ஏழு மாதங்களில் அந்நாட்டில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 103-ஆக உயர்ந்துள்ளது. ஆக, மாதத்திற்கு சராசரியாக 15 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற 2009-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகின. நடப்பு ஆண்டில், திவால் ஆகும் வங்கிகள் எண்ணிக்கை இதை விட அதிகமாகும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகரித்து வருவதால், வங்கிகளிலிருந்து கடன் வாங்கியவர்களால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், அந்நாட்டில் வங்கிகள் திவால் ஆவது தொடர்கதையாகி வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள அந்நாடு வழங்கிய சலுகைகளால், நடப்பு 2010-ஆம் ஆண்டில், அந்நாட்டின் நிதி பற்றாக்குறை 1.47 லட்சம் கோடி டாலராக மிகவும் உயர்ந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும். அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நம் நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக உள்ளது.



வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி, புதிய வட்டி விகித கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்),0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இனிமேல், புதிய ரெப்போ ரேட், 5.75 சதவீதமாக இருக்கும். இதேபோல், கடன் பெறுவதற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போரேட்), 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய வட்டி வீதம் இனிமேல் 4.5 சதவீதமாக இருக்கும்.வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் (சி.ஆர்.ஆர்.,)எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது, 6 சதவீத மாகவே தொடர்ந்து நீடிக்கும்.மேலும், 2010-11ம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 8சதவீதமாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டிருந்தது.புதிய வட்டி வீத கொள்கையை அறிவித்து, ரிசர்வ்வங்கி கவர்னர் சுப்பாராவ் பேசுகையில், 'கடந்த ஏப்ரலில் இருந்தே, நாட்டின்பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது' என்றார்.இது குறித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்து வதற்காகவே வட்டி வீதம் உயர்த்தப் பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

Tuesday, July 27, 2010

ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகித கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4.50 சதவீதமாக இருக்கிறது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் ( சி.ஆர்.ஆர்., ) அதே 6 சதவீதத்திலேயே இருக்கிறது. மேலும் 2010 - 2011 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி

அடுத்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். இதில் 500 மெகா வாட் சூரிய வெப்பத்தின் வாயிலாகவும், மற்றொரு 500 மெகா வாட் சூரிய ஒளி வாயிலாகவும் பெறப்படும் என அவர் கூறினார். மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றன. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கடன் வசதி அளித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் 2013-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பருப்பு விலை ச‌ரிவு

உணவுப் பொருட்களை, 'ஸ்டாக்' வைத்துள்ள வியாபாரிகள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரவிய தகவலால், பருப்பு விலை சரிந்துள்ளது. பருப்பு விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு, நீக்கியது. இருந்தும், வடமாநிலங்களில் வெள்ளம் காரணமாக, விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.



நவம்பர் 2009லிருந்து கடந்த வாரம் வரை, அனைத்து பருப்பு வகையிலும் நிலையில்லா தன்மையே நீடித்தது. இதனால், பெரிய வியாபாரிகளை தவிர, நடுத்தர மற்றும் சிறிய மளிகை கடை வியாபாரிகள், விற்பனைக்கு ஏற்ப பருப்பு வகைகளை கொள்முதல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வடமாநிலம், தமிழகத்தில் அனைத்து வகையான பருப்புகளையும் இருப்பு வைத்துள்ள வியாபாரிகளை கண்காணிக்க உளவுத் துறைக்கு, மத்திய, மாநில அரசுகள், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளன. இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவி, இருப்பு வைத்துள்ள பருப்பு வகைகளை விற்பனைக்கு அனுப்ப துவங்கி விட்டனர். வடமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு பருப்பு வரத்து, திடீர் என அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.



கடந்த வாரம், துவரம் பருப்பு மொத்த விலையில் குவிண்டால் 7,600 ரூபாய்க்கு விற்றது, நேற்று 6,950 ரூபாய்க்கும், 9,800 ரூபாய்க்கு விற்ற பாசி பருப்பு, 8,400 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, பாசி பருப்பின் விலை சரிவடைந்த நிலையில், உளுந்தம் பருப்பின் விலையில் மாற்றமில்லை. இச்சரிவு மேலும் தொடரும் என்பதால், வியாபாரிகள் மத்தியில் கடும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, July 21, 2010

உலகின் முதல் பெராரி தீம் பார்க்


உலகின் முதல் பெராரி தீம் பார்க் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டில் முதல்முறையாக பார்முலா ஒன் கார் போட்டிகள் நடை‌பெற்றன. அப்போது. அந்த போட்டிகளுக்கு, உலக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாகவும், அதனை கவுரவப்படுத்தும் பொருட்டு, பெராரி உலகம் துபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெராரி உலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெராரி தீம் பார்க், சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த தீம் பார்க 100 நாட்கள் திறந்திருக்கும் என்றும், இந்த தீம் பார்க்கில், உலகின் அதிவேக ரோலர் கோஸடர் நிறுவப்பட்டு உள்ளதாகவும், பெராரி பார்முலா ஒன் காரில் பயணம் செய்த உணர்வு, இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்கும்போது ஏற்படும் என்றும் துபாயின் முக்கிய சுற்றுலாத் தலமான யாஸ் மரினா சர்க்யூட்டில், கடந்த நவம்பர் 2009 காலம் வரை பார்வையிட்ட மக்களின் எண்ணிக்கையை, இந்த தீம்பார்க் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை மிஞ்சி விட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 20, 2010

கச்சா எண்ணெய் விலை உய‌ர்வு

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 77 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் செப்டம்பர் டெலிவரிக்கான விலை 5 சென்டுகள் அதிகரித்து 77.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9 சென்டுகள் அத‌ிகரித்து 76.31 அமெரிக்க டாலராக இருந்தது.

சச்சினின் 'ரத்த சரித்திரம்'

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்

பதிவும் முடிந்து விட்டது. ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது. கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டு உள்ளது. புதுமை: இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,'' கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் 'டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம். அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள் ளோம்,'' என்றார்.



இதற்கு முன்... : கிரிக்கெட் கடவுள் சச்சினின் சுயசரிதை புத்தகம் 37 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கு முன் மைக்கேல் ஏஞ்சலோ என்ற புத்தகம் 49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. கலைத்திறனை வெளிப்படுத்தும் இப்புத்தகம் கைகளினால் தயாரிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்டது. மொத்தம் 33 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட இப்புத்தகம் மார்பிள் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகத்தில் இது இடம் பெற்றுள்ளது. இதனை குரூப்போ எப்.எம்.ஆர்., நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.



Monday, July 19, 2010

தங்கம் விலை உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1709 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.18380 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.31.55 க்கும், பார் வெள்ளி ரூ.29510 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ப‌ங்குச்ச‌ந்தை நில‌வ‌ர‌ம்

மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது சரிவுடனேயே முடிந்தது. காலை 9.17 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.17 புள்ளிகள் குறைந்து 17913.65 ஆக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.75 புள்ளிகள் குறைந்து 5379.15 ஆக வர்த்தகமாகியிருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.40 புள்ளிகள் குறைந்து 17928.42 ஆக வர்த்தகமாகியிருந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 7.45 புள்ளிகள் குறைந்து 5386.45 ஆக வர்த்தகமாகியிருந்தது.

Saturday, July 17, 2010

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலையை முன்பு மத்திய பெட்ரோலிய அமைச்சகமே நிர்ணயம் செய்து வந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்ளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு கடந்த மாதம் மிக அதிக அளவுக்கு சென்றது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை, இது தொடர்பாக கூடி விவாதித்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மாறுவதற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விலை மாற்றத்தை எத்தகைய கால இடைவெளியில் செய்வது என்பதில் இந்திய எண்ணை நிறுவனங்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கலாம் என்று யோசனை கூறின. இதை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கவில்லை. இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை விலை நிர்ணயம் செய்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா எண்ணை நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தினார். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதன்படி மாதத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி வரும் 25 அல்லது 26-ந் தேதி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணை விலை சற்று குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையை அதற்கு ஏற்ப சற்று குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில் பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 20 பைசா குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத்பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மூன்றும் இந்த விலை குறைப்பை ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தும். தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களும் அரசு எண்ணை நிறுவனங்களை பின்பற்றி விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அடுத்த நான்கு ஆண்டுகளில் (2014ம் ஆண்டுக்குள்) நம் நாட்டில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 99.30 கோடியாக உயரும் என ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது. நடப்பு 2010ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 66 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருப்பர் என்றும் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. செல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பதில், உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. நடப்பாண்டு மே மாத நிலவரப்படி, நாட்டில் உள்ள செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 62 கோடியாகும். இது, சென்ற ஆண்டு இறுதியில் 52.50 கோடியாக இருந்தது. அதாவது, ஆண்டுக்கு 10 கோடி என்ற அளவில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த நான்கு ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனை அளவை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.நடப்பு நிதி ஆண்டில் இந்திய தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.4,000 கோடி முதலீடு மேற்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 கோடி செல்போன் இணைப்புகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.

விளைச்சல் குறைவால் மாம்ப‌ழ‌ விவ‌சாய‌ம் ந‌ஷ்ட‌ம்

வத்திராயிருப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாம்பழ சீசன் கடந்த வாரத்துடன் முழுமையாக முடிவடைந்தது. எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் அனேக இடங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ராஜபாளையம், ஸ்ரீவி., வத்திராயிருப்பு பகுதிகளில் 15,000 ஏக்கருக்கு மேல் மாம்பழ‌ விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் வரை மூன்று மாதங்கள் மாம்பழ சீசன் களைகட்டும்.



கடந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால் இந்த ஆண்டு சீசனில் வெயில் அதிகரித்து மாமரங்களில் பூத்த பூக்கள் எல்லாம் உதிர்ந்தன. வறட்சி நிலவியதால் மரங்களுக்கு நீர்பாய்ச்சவும் வழியின்றி போனது.உதிர்ந்த வடுக்கள்: இதன் காரணமாக இந்தாண்டு மாம்பழ சீசன் மந்தமாக துவங்கியது. சீசன் துவங்கிய பிறகு இடையிடையே சிறிது சாரல் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து ஒருசில பகுதிகளில் மரங்களில் புதிய பூக்கள் பூக்க துவங்கியது. பூத்தவையும் உதிரவில்லை. மே மாதம் ஒரளவு விளைச்சல் அதிகரித்தது. ஆனால் அதுவும் கடும் வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வடுக்களிலேயே உதிர்ந்தது. தாமதமாக பூத்த பூக்களில் ஒருசில இடங்களில் விவசாயிகள் தண்ணீரை தெளித்து மரங்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி பூக்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்ததால் நஷ்டத்திலிருந்து தங்களை காத்துக்கொண்டனர்.விவசாயிகள் ஏமாற்றம்: மற்ற அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டது. வழக்கமாக ஜூன் மாதம் முடிய வேண்டிய சீசன் இந்தாண்டு இடையே தாமதமாக பூத்த பூக்களால் ஜூலை வரை நீடித்தது. அங்கொன்றும் இங் கொன்றுமாக காய்த்த காய்கள் அனைத்தும் கடந்த வாரத்துடன் முழுமையாக பறிக்கப் பட்டன.சொந்த நிலங்களில் விவசாயம் செய்பவர்களை தவிர குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் எதிர் பார்த்த விளைச்சல் இல்லாததால் நஷ்டமே ஏற்பட்டது. இந்தாண்டு சீசன், நஷ்டத்துடன் முடிவடைந்ததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.