கடன் உதவி தரும் தனியார்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்ற பெயரில் வங்கிகளுடன் இணைந்து பணப்பரிவர்த்தனை புரிய அங்கீகாரம் தரலாம் என்று முன்னாள், "செபி' தலைவர் தாமோதரன் கூறினார். வங்கிகள் எல்லாருக்கும் கடன் தர முடியவில்லை. ஆனால், அவ்வப்போது கேட்டதும் பணம் தரக்கூடிய, "வட்டிக்கு பணம் தருபவர்கள்' அதிக வட்டி வசூலித்தாலும் பணம் தருகின்றனர். கிராமப்புறங்களில் இவர்கள் முக்கியமாக பணியாற்றுகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்த அளவு அவசரத்திற்கு கடன் பெறுபவர்கள் இரண்டு வட்டிக்கும் குறையாமல் தந்து பணம் பெறுகின்றனர். இவர்கள் வசதியாக கடன் பெற லைசென்சுடன், "வட்டிக்கு பணம் தருபவர்கள்' என்று தொழில் நடத்துபவர்களை வங்கிகளின் "வர்த்தக தொடர்பாளர்களாக ' ( பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்) நியமிக்கலாம் என்று முன்னாள், "செபி' அமைப்பின் தலைவர் தாமோதரன் யோசனை கூறினார். அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கித் தகவலின் படி நாட்டில் உள்ள மொத்த மக்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே வங்கிக்கணக்கு வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அதிக வங்கிக் கிளைகள் மட்டும் திறப்பதால் மிகவும் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு கடன் வசதி கிடைக்க வழியில்லை. அதே சமயம் கிராமங்களில் சிறு சிறு அமைப்புகளிடம் வாங்கும் கடன் உதவிக்கு 27 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இப்படி பணம் தருபவர்களை மக்கள் நம்பித்தான் வாழவேண்டும். மாறாக வங்கிகள் சேவை சிறக்கவும், இம்மாதிரி லைசென்சுடன் பணம் தருபவர்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்று நியமிக்கலாம். இவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு டிபாசிட் சேகரிப்பது, பரஸ்பர முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துதல், மற்றும் சிறிய அளவிலான கடன் தருவது ஆகியவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம் வட்டி அளவு குறையும். இது வங்கி நடைமுறைகள் கடைசி மட்டத்தில் உள்ள மக்களுக்கு அடையவும் உதவிடும். வங்கி நடைமுறைகள் சிறக்க உதவும். இவ்வாறு தாமோதரன் கூறினார்.
Thursday, September 9, 2010
அமரராஜா குழுமமத்தில் புதிதாக 3 ஆயிரம் பேர் நியமனம்
ஆட்டோமோடிவ் பேட்டரி தயாரிப்பில் தேசிய அளவில் முடிசூடா மன்னனாக விளங்கும் அமரராஜா நிறுவனம், வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்தவும், நிறுவனத்தின் வருவாயை 2 பில்லியன் அமெரி்க்க டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமரராஜா நிறுவன மனி்தவள மேம்பாடு பிரிவின் துணை தலைவர் ஜெய்கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனத்தின் தற்போதைய அளவில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், நிறுவனத்தின வருவாய் ரூ. 2 ஆயிரம் கோடியாக உள்ளதாகவும், தற்போதைய அளவில், தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள தங்கள் நிறுவனம், 2025ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் பார்சூன்500 (அதாவது தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில்) இடம்பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், நிறுவனத்தில் 55 முதல் 60 சதவீதம் வரை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், வளர்ச்சி சாத்தியப்படவேண்டுமென்றால், அதற்கு அதிகப்படியான ஊழியர்கள் தேவை என்றும், அதற்காகவே, வரும் 5 ஆண்டுகளுக்குள், புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும், நிறுவனத்தின் நிகர வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்( இந்திய மதிப்பில் ரூ. 9,300 கோடி) ஈட்ட திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HDFC லைப் இன்சூரன்ஸ் பிரிமிய வருவாய் உயர்வு
இந்தியாவின் முன்னணி தனியார் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எச்.டீ.எஃப்.சி. ஸ்டாண்டர்டு லைஃப் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு 2010-11-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், புதிய பிரிமிய வருவாயாக ரூ.692.70 கோடியை திரட்டி உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் திரட்டப்பட்ட தொகையை விட 63 சதவீதம் (ரூ.424.90 கோடி) அதிகம் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரி தெரிவித்தார். ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் தனியார் துறையில் இந்நிறுவனம் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 7.4 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிறுவனம் அதன் செலவினங்களை குறைத்ததையடுத்து, வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற காலாண்டில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிகம் ரூ.1,478.90 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டை விட 47.8 சதவீதம் (ரூ.1,000.50 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட பிரிமிய வருவாய் 38.3 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.548.80 கோடியிலிருந்து ரூ.758.90 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் - ஜுன் காலாண்டு நிலவரப்படி, இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 116 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.22,298 கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2009-ஆம் ஆண்டின் இதே காலாண்டு இறுதியில் ரூ.10,307 கோடியாக இருந்தது என சவுத்ரி மேலும் தெரிவித்தார்.
ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு கிலோ மல்லிகை 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஸ்ரீவில்லிப்புத்தூர், ரெட்டியப்பட்டி, மல்லி, வலையப்பட்டி, பாறைப்பட்டி உட்பட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை மல்லிகை கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. திருவோணம் பண்டிகையொட்டி நேற்று கிலோ மல்லிகைப்பூ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயி நாகராஜன் கூறியதாவது: கடந்த மாதத்தை விட மல்லிகை பூவிற்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. திருவோணம், திருமணம் நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த விலையேற்றம் இந்த மாதம் முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
'விஸ்கி' போட்டால் கார் ஓடுமா
இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எடின்பெர்க்கில் உள்ளது நேப்பியர் பல்கலைக்கழகம். தாவர எரிபொருள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞானி மார்ட்டின் டாங்னி தலைமையிலான குழுவினர், விஸ்கியை ஆராய்ந்தனர். அதில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ‘பாட் ஆல்’, தானியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ‘ட்ராப்’ ஆகிய 2 மூலப்பொருட்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு சர்வதேச காப்புரிமையும் பெற்றுள்ளனர். விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதுபற்றி மார்ட்டின் டாங்னி கூறியதாவது: இந்த பயோ-ச்ட்ணீ;ப்யூயலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 5 10 சதவீதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவு மிச்சம் செய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும். விஸ்கி தயாரிப்பில் பயன்படும் 2 மூலப்பொருட்கள் மட்டுமே இவை என்பதால் செலவும் குறைவாகவே இருக்கும் என்றார்.
ஏ.டி.எம் சேவையில் மக்கள் அதிருப்தி
நாட்டில் உள்ள ஏ.டி.எம்.,களில் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) 41 சதவீதம் பழுதடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து 'செபி'யின் முன்னாள் தலைவர் தாமோதரன் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வரும் நுõற்றுக்கணக்கான புகார்களில் 41 சதவீதம் ஏ.டி.எம்., மையங்களைப் பற்றியதாக உள்ளது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கணக்கு காட்டும் ஏ.டி.எம்., பணப்பரிவர்த்தனை, பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் தெரிவிக்கும் அவலமும் உண்டு; இது குறித்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுவதில்லை என பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசுடமையாக்கப்பட்ட 26 வங்கிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை; ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். சிறிய அளவிலான வங்கிகள் பெரிய அளவிலான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்ட நிறுவனம் உள்நாட்டு வங்கிகளில் அதற்கான பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. அதற்கு வசதியாக வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றார்.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவு
நடப்பு ஆண்டு ஜுலை மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, முந்தைய ஜுன் மாதத்தைக் காட்டிலும் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக இது சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூ3ஜி' செல்போன் அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலத்தைப் பெற நிறுவனங்கள் சென்ற ஜுன் மாதத்தில் வங்கிகளிடமிருந்து அதிக அளவில் கடன்களை பெற்றன. மேலும், முன்கூட்டிய வரியைச் செலுத்துவதற்கு வங்கிகளுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், வங்கிகள் அம்மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து அதிக தொகையை விலக்கி கொண்டன. இதனையடுத்து, சென்ற ஜுன் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 16 சதவீதம் (ரூ.1.27 லட்சம் கோடி) சரிவடைந்து ரூ.6,75,858 கோடியாக குறைந்தது. இது, ஜுலை மாதத்தில் ரூ.10,291 கோடி குறைந்து ரூ.6,65,567 கோடியாக சரிவடைந்துள்ளது. பல பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ள நிலையில், அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் மிஹீச்சுவல் ஃபண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 0.85 சதவீதம் அல்லது ரூ.859 கோடி அதிகரித்து ரூ.1,02,179 கோடியாக உயர்ந்துள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அடிப் படையில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. முன்னணி நிறுவனங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள எச்.டீ.எஃப்.சி. எம்.எஃப்., ஐ.சி.ஐ.சி.ஐ. எம்.எஃப். ஆகியவற்றின் சொத்து மதிப்பு முறையே 2.33 சதவீதம் 6.88 சதவீதம் சரிவடைந்து ரூ.84,628.20 கோடி மற்றும் ரூ.68,715.11 கோடி யாக சரிவடைந்துள்ளது. ஹீ.டி.ஐ. பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,238 கோடி குறைந்து ரூ.62,207.57 கோடியாக சரிவடைந்துள்ளது. பிர்லா சன்லைஃப் பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பில் 2.50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டக் மகிந்திரா எம்.எஃப். மற்றும் எல்-டி எம்.எஃப். ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் முறையே ரூ.1,051 கோடி மற்றும் ரூ.307 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஆக, சென்ற ஜுலை மாதத்தில் 39 பரஸ்பர நிதி நிறுவனங்களில் 19 நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)