Saturday, July 17, 2010

ப‌ங்கு வ‌ர்த்த‌க‌ நில‌வ‌ரம்


இந்திய பங்குச்சந்தை நேற்று (16/07/2010) நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.02 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.72 புள்ளிகள் அதிகரித்து 17918.18 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.30 புள்ளிகள் அதிகரித்து 5379.05 புள்ளிகளோடு காணப்பட்டது. தொடர்ந்து, 9.13 மணியளவில், சென்செக்ஸ் 0.83 புள்ளிகளும், நிப்டி 0.10 புள்ளிகளும் சரிவு கண்டு, பின் மீண்டும் 9.26 மணியளவில் சென்செக்ஸ் 8.13 புள்ளிகளும், நிப்டி 2.40 புள்ளிகளும் உயர்ந்தன. வர்த்தகத்தின் போது அவ்வப்போது இறக்க நிலையும் காணப்பட்டது. இன்று காலை வர்த்தக நேரம் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.36 புள்ளிகள் அதிகரித்து 17955.82 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.15 புள்ளிகள் அதிகரித்து 5393.90 புள்ளிகளோடு காணப்பட்டது.இன்றைய நிலவரப்படி இந்திய‌ பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடனேயே முடிந்தது.

No comments:

Post a Comment